×

இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஜெருசலேம்: செங்கடல் பகுதியில் இந்தியா நோக்கி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடா இணையும் பால் எல் மன்தேப் ஜலசந்தி அருகே ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட பனாமா நாட்டு எண்ணெய் டேங்கர் கப்பல் மீது 3 ஏவுகணை ஏவி ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் கப்பல் லேசாக சேதமடைந்துள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தில் உள்ள வாடினார் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த நவம்பரில் இருந்து இதுவரை 50 கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு கப்பலை சிறைபிடித்துள்ளனர். ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளனர்.

The post இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : India ,Jerusalem ,Houthi ,Russia ,Red Sea ,Bal El Mandeb ,Gulf of Yemen ,
× RELATED ஹவுதி ராணுவ வளாகத்தில் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்