- ஆந்திர மாநிலம்
- அமராவதி சட்டமன்ற தலைநகரம்
- கர்னூல்
- விசாகப்பட்டினம்
- முதல் அமைச்சர்
- ஜெகன்
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- அமராவதி
- ஜகன் மோகன்
- ததேபள்ளி
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் அமராவதியை சட்டமன்ற தலைநகரமாகவும், கர்னூல் நீதித்துறை தலைநகரமாகவும் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தாடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஆந்திர முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் ஜெகன்மோகன் கூறியதாவது: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் இருக்கும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராக இருக்கும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக விசாகப்பட்டினம் உருவாக்கப்படும்.
அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கப்படும். எங்கள் தேர்தல் வாக்குறுதியில் 9 முக்கிய வாக்குறுதிகளாக கல்வி, மருத்துவம், விவசாயம், உயர்கல்வி, வளர்ச்சி, ஏழைகளுக்கான வீடுகள், நாடு-நெடு, பெண்களுக்கு அதிகாரம், சமூகப் பாதுகாப்பு என 9 முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்படுகிறது. ஒய்எஸ்ஆர் (சையூத்தா) பங்களிப்பு திட்டத்தில் ரூ75 ஆயிரத்தில் இருந்து ரூ1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். ஒய்எஸ்ஆர் காப்பு நெஸ்தம் நான்கு தவணைகளில் ரூ60 ஆயிரத்தில் இருந்து ரூ1.20 லட்சமாக உயர்த்தப்படும். ஒய்எஸ்ஆர் ஏபிசி நெஸ்தம் நான்கு கட்டங்களில் ரூ45 ஆயிரத்தில் இருந்து ரூ1.05 லட்சம் வழங்கப்படும். தாய்மடி திட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்களின் தாயின் வங்கி கணக்கில் ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
வட்டியில்லா கடன் கீழ் ரூ3 லட்சம் வரை மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கப்படும். மூத்தகுடிமக்கள் ஓய்வூதியம் 2028 ஜனவரியில் 250 உயர்த்தி ரூ3250, 2029ல் 250 உயர்த்தி இரண்டு தவணைகளில் ரூ3,500 ஆக உயர்த்தப்படும். மேலும் ஒய்எஸ்ஆர் கல்யாணமஸ்து, ஷாதி தோபாவும் திருமண நிதி உதவி திட்டம் தொடரும். ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் திட்டம் தொடரும். நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரைத்து பரோசா திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ13,500 வழங்கப்படுவது ரூ16,000 ஆயிரமாக அதிகரித்து (ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளில் (ரூ8000, ரூ4000, ரூ4000) என வழங்கப்படும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
The post ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற தலைநகர் கர்னூல் நீதித்துறை தலைநகர் விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகர்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முதல்வர் ஜெகன் வாக்குறுதி appeared first on Dinakaran.