×

மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 போட்டி தேர்விற்கான மாதிரி தேர்வு

 

திருச்சி, ஏப். 26: திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி,என்,பி,எஸ்,சி குரூப் IV) போட்டித் தேர்விற்கான மாதிரிதேர்வு ஏப்.29 (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 1.30 வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் முழு பாட பகுதியிலிருந்து வினாக்கள் இடம் பெறும். ெதாடர்ந்து ரிவிசன் வகுப்பு நடைபெறும். குறிப்பெடுப்பதற்கு அவசியம் நோட்டு கொண்டு வரவும்.

இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிரி தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி iV தேர்விற்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 போட்டி தேர்விற்கான மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : District Central Library ,Trichy ,Trichy District Central Library ,N.R.I.A.S. ,Tamil Nadu Public Service Commission ,TNP ,SSC ,Academy ,Rotary Phoenix ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் இன்று கருத்தரங்கம்