×

ரயில்வே பணிக்காக இன்று முதல் 3 மாதம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்

சென்னை, ஏப்.26: ரயில்வே சுரங்கபாலம் பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் 3 மாத காலத்திற்கு ஒருவழிபாதையாக மாற்றி போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் இன்று இரவு முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.

 ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அனுகு சாலை – வடக்கு கோட்டை சாலை – முத்துசாமி சாலை – டாக்டர் முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் – கொடி மர சாலை – போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
 காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரயில்வே பணிக்காக இன்று முதல் 3 மாதம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : RBI ,Tunnel ,Chennai ,Chennai Metropolitan Traffic Police ,Southern Railway Department ,
× RELATED மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள்...