- தொழிலதிபர்
- புதுக்கோட்டை
- அமீர் சுல்தான்
- சமாஜ்வாடி பட்டினம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- வெங்கங்குடி
- Meemisal
- புதுக்கோட்டை மாவட்டம்
- இலங்கை
புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினத்தை சேர்ந்தவர் அமிர் சுல்தான். இவர், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேங்காங்குடியில் இறால் பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.111 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (ஹாஷிஷ்) மற்றும் 876 கிலோ கஞ்சா ஆகிய போதை பொருட்களை கடந்த மார்ச் 10ம் தேதி திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அனுமதியின்றி அரசு இடத்தில் இறால் பண்ணையை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை இடித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தரைமட்டமாக்கினர். அதோடு, இறால் பண்ணைக்கு கொடுக்கப்பட்டிருந்த மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இறால் பண்ணை உரிமையாளர் அமீர் சுல்தானை திருச்சியில் வைத்து சுங்கத்துறை நுண்ணறிவு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
The post ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது appeared first on Dinakaran.