திருப்பூர், ஏப்.24: திருப்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான எல்ஆர்ஜி கல்லூரி ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு என்னும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கும் என்னும் மையம் முழுவதும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமிராக்களுக்கு என தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் பெரிய அளவிலான எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமிரா மூலம் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது appeared first on Dinakaran.