×
Saravana Stores

அதிமுக 40 தொகுதிகளிலும் 3ம் இடம்தான் பிடிக்கும்: டிடிவி தினகரன் சொல்கிறார்

திருச்செந்தூர்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். இராக்கால அபிஷேகத்தில் மூலவர், சண்முகரை வழிபட்டார். பின்னர் சூரசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

ஒரு கட்சியை அபகரித்து வைத்திருப்பவர் தலைவராக முடியுமா? எடப்பாடி பழனிசாமி, தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகியிருக்கிறது. இபிஎஸ்சின் தலைமையில் சிலரது சுயநலத்தால் பதவி வெறியால் துரோக புத்தியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் கட்சி பாஜ அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும். அதிமுக 40 தொகுதிகளிலும் 3ம் இடம்தான் பிடிக்கும், என்றார்.

The post அதிமுக 40 தொகுதிகளிலும் 3ம் இடம்தான் பிடிக்கும்: டிடிவி தினகரன் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DTV ,Dhinakaran ,Tiruchendur ,Chitra Pournami ,AAMUK ,General ,TTV Dhinakaran ,Tiruchendur Subramania ,Swamy Temple ,Moolavar ,Shanmukhara ,Surasamhara Murthy ,Dinakaran ,
× RELATED ரேசனில் துவரம் பருப்பு தட்டுப்பாடின்றி தருக: டிடிவி தினகரன் வலியுறுத்தல்