- அம்பத்தூர்
- சரண் ம்கும்மிடிப்பூண்டி
- Kummidipoondi
- கைலார்மேடு
- பெரிய ஓபுலாபுரம் ஊராட்சி
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி...
- அம்பத்தூர் பேருந்து நிலையம்
- சரண் எம்பயங்கரம்
கும்மிடிப்பூண்டி, ஏப். 24: கும்மிடிப்பூண்டி அருகே ஜாமீனில் வந்த வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் 6 பேர் கொண்ட கும்பல் போலீசில் சரணடைந்தது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஒபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காய்லர்மேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு நேற்று முன்தினம் புதிதாக அம்மன் கோயில் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பெரிய ஒபுளாபுரம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, மாதர்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற திலீப்குமார் என்பவர் கோங்கல் பேருந்து நிலையம் அருகே தலையில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பாதிரிவேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோங்கல், காய்லர்மேடு, குமாரநாயக்கன்பேட்டை மற்றும் ஈகார்பாளையம் செல்லும் சாலை ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் 6 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் காட்சி தெள்ளத் தெளிவாக பதிவாகியிருந்தது. குமாரநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்பவர்தான் நேற்று முன்தினம் இரவு அருண்குமாரை அழைத்துச் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அதன்படி தாமஸிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர கொலை வழக்கில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென பாதிரிவேடு காவல் நிலையத்தில் 6 பேர் சரணடைந்தனர். அவர்கள் காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்த அஜய் (25), ஞானசேகர் (23), சேட்டு (எ) மோகன்குமார் (20), சாரதி (20), கோங்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த ஷாருக்கான் (23), பொன்னேரி எடபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி இரவு, மாநெல்லுார் கிராமத்தில் சக்திவேல் (21) என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலில், தற்போது கொலையான அருண் குமாரும் இருந்துள்ளார். அந்த வழக்கில் கைதான திலீப்குமார், இம்மாத தொடக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதில், காயலார்மேடு பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு ஸ்கெட்ச் போட்டதாகவும், அவர் தப்பியதால் சக்திவேல் வெட்டப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அஜய், தன்னை கொல்வதற்கு முன், சக்திவேலை வெட்டிய கும்பலை பழிக்குப்பழி தீர்க்க முடிவு எடுத்துள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு, கோங்கல்மேடு பேருந்து நிறுத்தத்தில் அருண்குமார் சரக்கு அடிப்பதை தெரிந்து கொண்டு கத்திகளுடன் தனது கூட்டாளிகளை அழைத்துச் சென்று அஜய் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரணடைந்த 6 பேரை பாதிரிவேடு போலீசார் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா தொழில் போட்டி
இதில் இரு தரப்பினரும் கூட்டாக செயல்பட்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி, கமிஷனுக்கு விற்று வந்துள்ளனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் தொழில் போட்டியே மார்ச் மாதம் நடந்த கொலை முயற்சிக்கும், நேற்று முன்தினம் நடந்த கொலைக்கும் காரணம் என கூறப்படுகிறது
The post அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12 கோடியில் நவீனமயமாகிறது: m6 பேர் போலீசில் சரண் mகும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் appeared first on Dinakaran.