×

பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக மாஜி முதல்வர் குமாரசாமி விளக்கம்

பெங்களூரு: பாஜவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை இணையும் என்ற கேள்விக்கே இடமில்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பாஜவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆளும் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மதம் சார்புள்ள கட்சியான பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை இணைத்துக் கொள்வதே சரியாக இருக்கும்’ என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவில் இணையும் என்ற கேள்விக்கே இடமில்லை. இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவோம். எங்கள் கட்சியை வேறு எந்த கட்சியுடனும் இணைக்கும் கேள்விக்கே இடமில்லை. 100 சித்தராமையாக்கள் எங்களுக்கு எதிராக வந்தாலும், எங்களது கட்சிக்கு எந்தத் தீங்கும் வராது’ என்றார். இதற்கிடையே அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேகதாது விவகாரத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் எங்கள் கூட்டணி சார்பில் சட்ட ரீதியாக தீர்வு காணும் என்று கூறினார்.

The post பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக மாஜி முதல்வர் குமாரசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Chief Minister ,Kumaraswamy ,Bengaluru ,Former ,HD Kumaraswamy ,Janata Dal ,Congress ,Dinakaran ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...