×

பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி அக்னி ஆறு அருகே தீப்பற்றி எரிந்த நாணல் குத்து

 

கறம்பக்குடி, ஏப்.21: கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் தீப்பிடித்து எரிந்த நாணல் குத்துகளை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அக்னி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த அக்னி ஆற்று மணல் பறப்பில் ஏராளமான நாணல் குத்துகள் காணப்படுகிறது. தற்போது நிலவி வரும் கரும் வெப்பத்தால் நேற்று இந்த நாணல் குத்து பகுதியில் காய்ந்திருந்த சறுகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அவ்வழியாக சென்றவர்கள் உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எறிந்து கொண்டிருந்த நாணல் குத்துகளை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

 

The post பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி அக்னி ஆறு அருகே தீப்பற்றி எரிந்த நாணல் குத்து appeared first on Dinakaran.

Tags : Agni Six ,Karambakudi ,Agni River ,Pudukkottai district ,Agni ,Karampakudi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு