- ஸ்டாலின்
- அலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புவனகிரி
- முன்னாள்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- நீலகிரி
- கீரப்பாளையம்
- சிதம்பரம்
- 2024 நாடாளுமன்றம்
புவனகிரி, ஏப். 20: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, தனது குடும்பத்தோடு வந்து சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான பிரச்னைகளுக்கு விடை காண காத்திருக்கிறது. ஒன்று இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பது. இரண்டு, இந்தியாவின் மேம்பட்ட வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவது. இந்த இரண்டையும் இந்தியா கூட்டணி திறமையாக செய்து வருகிறோம். மத நல்லிணக்கம், ஜாதி நல்லிணக்கம் வேண்டும். மொழிகளுக்கிடையே நல்லிணக்கம் வேண்டும் என்று சொல்கிறோம். தத்துவ தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். தமிழகத்தில் ஸ்டாலின், அதை தூக்கி நிறுத்துகிறார். இந்தியாவை காப்போம் என ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். திருமாவளவன் கொள்கை ரீதியானவர். தனி மனித விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாதவர். சமூகத்தில் பல அடுக்குகள் இருக்கக் கூடாது. கீழே இருப்பவர்கள் மேலே வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மேலிருப்பவர்கள் கீழே வர வேண்டும் என்பது எண்ணம் இல்லை. உயர்ந்த கருத்துக்களை சொல்வதால் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் வெப்ப அலைதான் வீசுகிறது. மோடி அலை எதுவும் வீசவில்லை. தமிழகத்தில் ஸ்டாலின் அலைதான் வீசுகிறது, என்றார்.
The post தமிழகத்தில் ஸ்டாலின் அலைதான் வீசுகிறது appeared first on Dinakaran.