×
Saravana Stores

‘வெப்ப அலை பாதிப்பு’ மாநில பேரிடராக அறிவிப்பு: உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி; தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

சென்னை: வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், “வெப்ப அலை பாதிப்பு மாநில பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்ச நிவாரணம் வழங்கப்படும். அதேபோல், தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க பேரிடர் நிதியை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதிக அளவு பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் நீரிழப்பை தடுப்பதற்காக உப்பு சர்க்கரை கரைசல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக பல இடங்களில் குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘வெப்ப அலை பாதிப்பு’ மாநில பேரிடராக அறிவிப்பு: உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி; தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Heat wave ,Tamil Nadu Government Gazette ,Chennai ,Tamil Nadu government ,heat ,
× RELATED தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி...