- இந்தியா கூட்டணி
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மு.கே ஸ்டாலின்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- ஜனாதிபதி
- யூனியன் அரசு
தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளியுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: வணக்கம், நல்லாயிருக்கிங்களா.. ஏப்ரல் 19, நம்முடைய நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்க போற நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்பியை மட்டும் தேர்வு செய்யும் வாக்கு அல்ல, கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்று முடிவு பண்ணும் தேர்தல்.அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல், மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்கு தான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன் என்று உங்களுக்கே தெரியும்.
மாதமாதம் மகளிருக்கு ரூ. 1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிர் இலவச பேருந்து சேவை, காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டமான நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும் உங்கள் திராவிட மாடல் அரசோட சாதனைகள் இந்திய முழுவதும் எதிரொலிக்க இந்தியா கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜவையும், தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
* வாக்கு சதவீதம்
தமிழகத்தில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் விவரம் வருமாறு:
2009 73.02%
2014 73.74%
2019 72.47%
The post தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி அமைய இந்தியா கூட்டணிக்கு வாக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் appeared first on Dinakaran.