×

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பி. மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், கோவிலம்பாக்கம் மணிமாறன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெரும்பாக்கம் பிரதான சாலையில் உள்ள அட்வெண்ட் தேவாலயம் அருகே, பிரசாரத்தை தொடங்கிய ஜெயவர்தன், வீதி வீதியாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து ஜெயவர்தன் நிருபர்களிடன் கூறியதாவது:
தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ள இடங்களில் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும், புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். 2014-2019 நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஏழை, எளிய மக்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டிதர நடவடிக்கை எடுத்தேன்.

மீண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி நிதியை பெற்று வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்த, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஜெயவர்தன் கூறினார்.

The post தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : South Chennai ,AIADMK ,Jayavardhan ,Chennai ,Dr. ,J. Jayawardhan ,Perumbakkam ,Choshinganallur ,minister ,Gokula Indira ,MLA ,KP Kandan ,Kovilambakkam ,Manimaran ,Dinakaran ,
× RELATED காலாவதியான மருந்து விற்றதாக தென்...