- கணிதக் கருத்தரங்கு
- காஞ்சிபுரம்
- காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை
- கீசாம்பி
- போஸ்
- முதல்வர்
- அரங்கநாதன்
- ஜனாதிபதி
- ஜெயக்குமார்
- வீரராகவன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்துள்ள கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறையின் சார்பில் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரராகவன், பொருளாளர் மல்லிகா மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணிதத்துறை தலைவர் சண்முகம் வரவேற்றார். இதில், கல்லூரி முதல்வர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து கருத்தரங்கின் நோக்கம் பற்றி பேசினார். சிறப்பு விருந்தினார்களாக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் கணிதத்துறை உதவி பேராசிரியர்கள் கலைவாணி, ரமேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக கணிதவியல் உதவி பேராசிரியர் தணிகைவேல் நன்றி கூறினார். அக்கல்லூரியின் துணை முதல்வர் பிரகாஷ், உதவி பேராசிரியர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post கணிதத்துறை கருத்தரங்கம் appeared first on Dinakaran.