- விந்தியா கிஜி
- கோவா பாராளுமன்ற
- சிங் ராமச்சந்திரன்
- விந்தியா
- வடவள்ளி பி. என்.
- Budur
- அண்ணன் வடிவேலு
- கிஜி
கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, நடிகை விந்தியா, நேற்று முன்தினம் இரவு வடவள்ளி பி.என்.புதூர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,‘தமிழ் திரைப்படம் ஒன்றில், காமெடி நடிகர், அண்ணன் வடிவேலு, நானும் ரவுடிதான்.., நானும் ரவுடிதான்… ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்…. என கத்துவார். அதைப்போன்று, இத்தொகுதியில் போட்டியிடும் ஒருவர், நானும் தலைவர்தான்… நானும் தலைவர்தான்… என கூறிக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார். அந்த ஆட்டுக்குட்டி, இப்போதைக்கு சிங்கம் வேஷம் போடலாம். அது, சிங்கம் என்று யாரும் நம்பி விடாதீர்கள். இத்தேர்தல் முடிந்த உடன், அந்த ஆட்டுக்குட்டி பிரியாணி ஆகப்போவது உறுதி. பொதுவாக, திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பான். இது, தமிழர் பண்பாடு. தமிழர் கலாசாரம், வரலாறு. அப்படித்தான் இந்த ஆட்டுக்குட்டியும், பிரியாணி ஆகப்போகிறது. தேர்தலுக்கு பிறகு, மட்டன் பிரியாணி கன்பார்ம்.
தமிழ்நாட்டு மக்கள ஏமாத்தலாம்னு இன்னைக்கு மோடி ரோடு ஷோ, அமித்ஷா ரோடு ஷோ. எல்லாரும் ரோட்ல இறங்கி வித்தை காட்டுறாங்க. இதுலவேற அண்ணாமல பெருமையா பேசுறாறு. என்னனு, எடப்பாடியாருக்கு தில் இருந்தா ரோடு ஷோ நடத்த சொல்லுங்கனு.. வித்த காட்ட சொல்லுங்கனு.. தம்பிக்கு ஒரு விஷயம் புரியல.. கைத்தட்டல் வாங்க குரங்குதான் குட்டிக்கரணம் போடும். சிங்கம் சும்மா சிரிச்சுகிட்டு இருந்தா போதும். இவங்க எல்லாரும் யாரு கிட்ட வந்து அரசியல் பேசுறாங்க.. 52 வருட ஆல மரம் இந்த அதிமுக. இத நேத்து முளைத்த புல்லு எல்லாம் அசைத்து பார்க்கலாம்னு நெனைக்குறது முட்டாள் தனம்.
இவ்வாறு நடிகை விந்தியா பேசினார்.
The post கைத்தட்டலுக்கு குரங்குதான் குட்டிக்கரணம் போடும்… சிங்கம் சும்மா சிரிச்சுகிட்டு இருந்தா போதும்… தேர்தலுக்கு பின் ஆட்டுக்குட்டி மட்டன் பிரியாணி ஆவது உறுதி: விந்தியா கிழி…கிழி… appeared first on Dinakaran.