×

குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

விருதுநகர், ஏப். 16: விருதுநகர் நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் 2007ல் துவங்கி இன்று வரை நிறைவடையவில்லை. நகரில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் முழுமை பெறாத நிலையில், நகரின் பெரும்பான்மையான கழிவு நீர் கவுசிகா ஆற்றில் விடப்பட்டு வருகிறன்றன. பாதாளச்சாக்கடை கழிவுநீர் குழாய்கள் 6 அடி ஆழம் துவங்கி 20 அடி ஆழம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 4 இன்ச் முதல் 12 இன்ச் வரையிலான மண் குழாய்கள் பாதிக்கப்பட்ட இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 4 இன்ச் குழாய்களில் கொண்டு செல்லப்படுவதால் பல இடங்களில் மண் குழாய்கள் மக்கி அடைத்து போய் கிடக்கின்றன. ராமமூர்த்தி ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் அருப்புக்கோட்டை ரோடு வரை குழாய்கள் மக்கி அடைப்பெடுத்து கிடப்பதால் கழிவுநீர் ஆங்காங்கே ஓடைகளில் விடப்பட்டு குல்லூர்சந்தை அணையில் கலக்கின்றன.நகரில் சாரல் மழை பெய்தால் கூட நகரில் பாதளாச்சாக்கடைகளில் அடைப்பெடுத்து வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்து விடுகிறது.

பழைய பஸ் நிலைய அருகில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்திலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மதுரை ரோட்டில் நகராட்சி குடிநீர் நீரோற்று தொட்டியின் வெளிப்பகுதியிலும் கழிவுநீர் பலமாதங்களாக தேங்கி நிற்கிறது. நகரில் பாதாளச்சாக்கடை குழாய்களில் செல்ல வேண்டிய கழிவுநீர் சாலைகளிலும், ஓடைகளிலும், கௌசிகா ஆற்றில் சென்று குல்லூர்சந்தை அணையில் கலப்பதை முழுமையான முறையில் தடை செய்ய உரிய திட்டங்களை செயலாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gullurchandhai Dam ,Virudhunagar ,Kausika River ,Badalachakkadai ,Gullurchandai Dam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...