×
Saravana Stores

பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: தம்பதி உயிர் தப்பினர்

ஆவடி: பூந்தமல்லி அருகே தலை குப்புற கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானதில் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆவடி அடுத்த புதூர், பழனியப்பன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52). இவர், அம்பத்தூர் பாலாஜி நகரில் அட்டை கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவியுடன் காரில் அரக்கோணம் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காரை அவரது மனைவி யமுனா (47) ஓட்டினார். திருமுல்லைவாயில் ஸ்டெட்போர்டு மருத்துவமனை அருகே கார் சென்றபோது, சாலையோரத்தில் இருந்த கற்கள் மீது ஏறி இறங்கியதில், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, காரில் இருந்த ‘ஏர் பலூன்’ செயல்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: தம்பதி உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Aavadi ,Krishnan ,Palaniappan, Budur ,Avadi ,Ambattur Balaji Nagar ,
× RELATED மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள்,...