×
Saravana Stores

பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

பொன்னேரி: வழக்குகளில் தொடர்புடையவர்களை தனியார் கம்பெனிகளில் மீண்டும் பணி அமர்த்தக்கோரி காட்டுப்பள்ளி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காட்டுப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் எல்அண்ட்டி, அதானி துறைமுகம், எம்.எப்.எப்.கே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த காட்டுப்பள்ளி கிராம மக்கள், 2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 நபர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறினர். இதை அறிந்த மீஞ்சூர் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சந்தான லட்சுமி, காட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சாம் வின்சென்ட் ஆகியோர் தலைமையில், காட்டுப்பள்ளி கிராம மக்களிடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

The post பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kattupally ,Katturpalli ,Tiruvallur District ,Ponneri Block ,Meenjoor Union ,Kattur Police Station ,L&D ,Dinakaran ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் மீஞ்சூர்-தச்சூர் கூட்டு சாலை சீரமைப்பு