- கடம்பத்தூர் யூனியன்
- மகா லட்சுமி
- பாஜக
- பொன்.வி. பாலகணபதி
- திருவள்ளூர்
- திருவள்ளூர் ஊராட்சி
- பொன் வி.பாலகணபதி
- கடம்பத்தூர் ஒன்றியம்
- பொன்.வி. பாலகணபதி
- பொலிவாக்கம்
- கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதி பாஜ வேட்பாளர் பொன் வி.பாலகணபதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது போளிவாக்கம் பகுதியில் வேட்பாளர் பொன்.வி.பாலகணபதிக்கு பொதுமக்கள் தாமரைப் பூக்கள் பரிசாக அளித்து உற்சாகமாக வரவேற்றனர். அங்கு பேசிய வேட்பாளர் பொன் வி.பாலகணபதி, தாமரைக்கு என தனிச்சிறப்பு உண்டு. அதாவது தாமரை மீது மகாலட்சுமி அமர்ந்திருப்பார். எனவே தற்போது வீடுகளுக்கு இந்த தாமரைப் பூக்களை எடுத்துச் செல்லுங்கள். வரும் தேர்தலில் தாமரைப் பூ சின்னத்திற்கு வாக்களித்தால் மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்த மாதிரி என பேசி வாக்குகளை சேகரித்தார்.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், ரூ.319 ஆக கூலியை உயர்த்தி வழங்கவும், ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கவும், போளிவாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றவும், மணவாளநகர் பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய அரசு நலத்திட்டப் பிரிவு மாநில தலைவர் பூவை ஜெ.லோகநாதன், மாவட்டத் தலைவர் எம்.அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா, பாமக இளைஞர் சங்க செயலாளர் வ.பாலா என்ற பாலயோகி, மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, பாஜ தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் பன்னீர்செல்வம், டில்லிபாபு, மண்டல தலைவர்கள் ரவிக்குமார், பழனி, மாரியம்மாள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதிவீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
The post கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு தாமரைக்கு வாக்களித்தால் மகாலட்சுமியே உங்கள் வீட்டிற்கு வந்த மாதிரி: பாஜ வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேச்சு appeared first on Dinakaran.