திருவள்ளூர்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணிக்கை அறை, தபால் வாக்குகள் வைப்பு அறை, மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படும் வழித்தடம், அரசியல் கட்சி முகவர்கள் செல்லும் வழித்தடம், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியின் செயல்பாடுகள் குறித்து கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.