- ராமதாஸ்
- பாம்
- பாஜக
- அன்புமணி
- விழுப்புரம் தொகுதி
- மூங்கில்
- முரலி சங்கர்
- வானூர் மொலசூர்
- வானூர் திருச்சிரம்பளம்
- பாமா
\
பாஜ கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் தொகுதியில் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் மொளசூருக்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தை துவக்கினார். ஒரு வாரம் கழித்து கடந்த வாரத்தில் வானூர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டுக்கு சென்று பிரசாரம் செய்தார். அதற்பிறகு திண்டிவனம்,காஞ்சிபுரம் அரக்கோணம், கடலூர், ஆரணியில் ஒரே இடத்தில் மட்டும் பிரசாரம் செய்தாராம். திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் மற்றும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்யவில்லை.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட நிர்வாகி கூறுகையில், ‘பாமக நிறுவனர் ராமதாஸ், தீவிர பிரசாரத்தில் ஈடுபடாதது இந்த தேர்தலில் தான். சூறாவளி பிரசாரம் செய்ய உடல்நிலை காரணம் கூறினாலும், கள்ளக்குறிச்சியில் பாமக வேட்பாளருக்கு பிரசாரம் செய்யவில்லை. அருகில் உள்ள புதுவை மாநிலத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நமச்சிவாயம், பாமகவுடன் கூட்டணி அமைந்தவுடன் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால் அவருக்கு கூட பிரசாரம் செய்யவில்லை. இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் அவரது கொள்கைக்கு எதிரான கூட்டணி என்பதால் இயல்பாக அவர் பிரசாரம் செய்வதற்கு மனசு இல்லை என்பது தான் உண்மையான காரணமாகும். இதுபாமக தொண்டர்கள் மத்தியில் கவலையும், சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது, என்றார்.
விழுப்புரம் தொகுதியில் பெயர் அளவில் இரு இடங்களில் பிரசாரம் செய்ததை தவிர்த்து அருகில் உள்ள கள்ளக்குறிச்சி, சிதம்பரம் மற்றும் புதுவையில் என எந்த தொகுதிகளில் ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை. குறிப்பாக பாஜ வேட்பாளர் ஒருத்தரையும் ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை.
பொதுவாக கூட்டணி கட்சி தலைவர்கள் போட்டியிட்டால் அவர்களை ஆதரித்து மற்ற கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். வேட்பாளர்களாக உள்ள டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். ஆனால், டிடிவி.தினகரன், ஓபிஎஸ், அண்ணாமலை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை. ஏன், தர்மபுரியில் போட்டியிடும் தனது மருமகளான அன்புமணி மனைவியை ஆதரித்து கூட ராமதாஸ் ஓட்டுவேட்டை நடத்தவில்லை.
The post பாமக, பாஜ வேட்பாளர்கள், அன்புமணி மனைவிக்கு பிரசாரம் செய்யாத ராமதாஸ் appeared first on Dinakaran.