×

சென்னையில் மழைநீர் வடிகால்களை முழுமையாக சரி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னையில் உள்ள முதன்மை சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் மழைநீர் வடிகால்களை முழுமையாக சரி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramadas ,Palamaka ,Dinakaran ,
× RELATED பாமகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகினார் முகுந்தன்