- பெரும்புதூர் தொகுதி
- செங்கல்பட்டு
- பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Perumbudur
செங்கல்பட்டு, ஏப். 13: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில், 23.82 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனர். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. அதனால், 100 சதவீதம் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து தேர்தல் பிரசாரம் செய்தல், மாணவ – மாணவிகளுக்கு கலாச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதில், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களின் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவி குழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல், மனித சங்கலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, போலீசார் என பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட சுயேட்சை என 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், தொடர்ந்து வேட்பு மனு பரிசிலனை கடந்த 28ம் தேதி நடந்தது. அதில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம்குமார், தமாகா வேட்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட 32 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், ஜெயக்குமார் என்பவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இத்தொகுதியில், திமுக, அதிமுக தமாகா உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கும், பதிவு பெற்ற 11 அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்ன ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது, வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்யும் பணிகளும் தீவிரமா நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263 பேர், பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து ஆயிரத்து 427 பேர், இதர வாக்காளர்கள் 429 பேர் என மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, போலீசார் என பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொகுதி ஆண் பெண் இதர மொத்தம்
மதுரவாயல் 2,14,986 2,13,139 119 4,28,244
அம்பத்தூர் 1,78,153 1,79,392 79 3,57,624
ஆலந்தூர் 1,89,208 1,94,155 61 3,83,424
பெரும்புதூர் 1,86,090 1,97,180 60 3,83,330
பல்லாவரம் 2,13,868 2,16,497 44 4,30,409
தாம்பரம் 1,97,958 2,01,064 66 3,99,088
மொத்தம் 11,80,263 12,01,427 429 23,82,119
The post பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில் வாக்குகளை பதியவுள்ள 23.82 லட்சம் வாக்காளர்கள் appeared first on Dinakaran.