×

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் எம்எல்சி கவிதாவிற்கு மேலும் 14 நாள் நீதிமன்ற காவல் நீடிப்பு

*நீதிமன்றம் உத்தரவு

திருமலை : டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு பீகார் சிறையில் உள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் திகார் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜரார்படுத்தப்பட்டது. அப்போது கவிதா வெளியே வந்தால் வழக்கு சாட்சியங்களை மாற்ற வாய்ப்புள்ளதால் மேலும் காவல் நீடிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டது. இதனையடுத்து நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், கவிதா ஏப்ரல் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளனர். இதற்கிடையே கவிதா பிகார் சிறையில் இருந்தபடி நான்கு பக்கத்தில் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுபான வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மது வழக்கில் கூறப்பட்டது போன்று தனக்கு எந்த நிதி ஆதாயமும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்படவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு இரண்டரை ஆண்டுகள் நடந்தது.

நான்கு முறை விசாரணையில் ஆஜாரானேன் வங்கி விவரங்களையும் அளித்து விசாரணைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைத்தேன். தனது மொபைல் போன்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதில் உள்ள விவரங்களை அதை அழித்துவிட்டதாக பொய்யாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த வழக்கின் ஒரு பகுதியாக பல விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றியவர்கள் அடிப்படையில் வழக்கு நடத்தப்படுகிறது.

சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை எங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஏன் கைது செய்யவில்லை. ஆதாரம் இல்லாத நிலையிலும் தற்போது கைது என்னை செய்துள்ளனர். இரண்டரை வருட விசாரணை அமலாக்கத்துறை எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் என்னை கைது செய்தனர். கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறி அமலாக்கத்துறை என்னை கைது செய்தனர். 95 சதவீதம் வழக்குகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்பானவை. பா.ஜவில் இணைந்தவுடன், அந்த வழக்குகளின் விசாரணை அத்துடன் நின்று விடும்.

வாயை மூடு அல்லது நாங்கள் அமலாக்கத்துறையை அனுப்புவோம் என்று பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நாடாளுமன்ற சாட்சியாகக் கூறினர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் நீதித்துறையையே நோக்கி காத்திருக்கிறது. நீதித்துறை உரிய நீதியை வழங்கும் என நம்புகிறோம். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன். இந்தச் சூழ்நிலையில் எனது இளைய மகன் பரீட்சைக்குத் தயாராகும் போது தாயாக அவருடன் இருக்க வேண்டும் என்பதால் எனக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாத்திரத்தை எனது மகனுக்கு வேறு யாராலும் வழங்க முடியாது. நான் இல்லாதது என் மகனை எதிர்மறையாக பாதிக்கும் என்று நான் கவலைப்படுகிறேன். எனது ஜாமீன் மனுவை பரிசீலிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

The post டெல்லி மதுபான கொள்கை வழக்கில் எம்எல்சி கவிதாவிற்கு மேலும் 14 நாள் நீதிமன்ற காவல் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : MLC Kavita ,Delhi ,MLC ,KAVIDA ,BIHAR ,Tigar ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...