- திருவள்ளூர் காங்கிரஸ்
- சசிகாந்த் செந்தில்
- திருவள்ளூர்
- காங்கிரஸ்
- திருவள்ளூர் பாராளுமன்றம்
- தனி) தொகுதி
- மாவட்டம் தி.மு.க.
- அவாதி எஸ் நாசர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பூந்தமல்லி
- ஏ கிருஷ்ணசாமி
- யூனியன் டி.எம்.கே.
- ஆர்.ஜெயசீலன்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் காங்கிரஸ்
- தின மலர்
திருவள்ளூர், ஏப். 10: திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து முன்னாள் அமைச்சர், மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன் ஆகியோர் திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு, அரண்வாயல், புட்லூர், தண்ணீர்குளம், ஆயலூர், கிளாம்பாக்கம், கோயம்பாக்கம், வதட்டூர், பேரத்தூர், வீராபுரம், தண்டலம், கல்யாணகுப்பம், காக்களூர் ஆகிய ஊராட்சிகளில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீதிவீதியாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தனர்.
இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ், மாவட்ட நிர்வாகிகள் சதா பாஸ்கரன், வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், கிளம்பாக்கம் எம்.சிவகுமார், வெங்கடேசன், வட்டாரத் தலைவர்கள் பொன்ராஜ், ஈகை தேவேந்திரன், ராமுலு, மதுசூதனராவ், நகரத் தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் அருண் கவுதமன், தளபதி சுந்தர், திமுக பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சொக்கலிங்கம், தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், சீனிவாசன், ராமச்சந்திரன், பரமேஸ்வரன், தயாளன், சவுந்தரராஜன், ஜெயபுகழேந்தி, த.சுகுமார், கௌரி கஜேந்திரன், பூவண்ணன், பிரபு, ஜெயசங்கர், தர், பாஸ்கர், செந்தில், முருகன், லாசர், அருண்கீதன், தினேஷ்குமார், தியாகராஜன், விஜய் ஆனந்த், அசோக்குமார், குரு, சத்யா ஜெயபால், வெங்கடேசன், பாஸ்கர், லக்ஷ்மணன், கோபாலகிருஷ்ணன், சிற்றரசு, பூபதி, புருஷோத்தமன், முத்துமாரி, மோகன்ராவ், மூர்த்தி, உதயநிதி, சுதா, மேத்தா, தயா, ரவிச்சந்திரன், கனகசபை, மகாதேவன், மேகநாதன், மேகவர்ணன், சதீஷ், அப்பன்ராஜ், பாபு, ஜனா, சம்பத், மோகன்தாஸ், நவமணி, விக்கி (எ) விக்னேஷ், சிவபிரகாஷ், டி.சதீஷ், கார்த்திக், மதன், சேதுபதி, குருபிரசாத், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.வினோத்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசுகையில், ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் நிதியுதவி வழங்கவும், பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ₹1 லட்சம் உதவி தொகை வழங்கவும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை ₹400 ஆக உயர்த்தவும், ஊரக வேலை திட்டத்தைப் போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
The post நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படும் பெண்களுக்கு ஆண்டுதோறும் ₹1 லட்சம் நிதியுதவி: திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உறுதி appeared first on Dinakaran.