×

ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல் திட்டம்: பாஜவை நார் நாராக கிழித்த அமைச்சர் பிடிஆர்

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் நேற்று பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது பாஜ. வங்கதேசத்தை விட இந்தியாவின் பொருளாதாரத்தை மிகவும் சரிவாக கொண்டு சென்றுள்ளனர். ஊழலுக்கும், பாஜவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த உலகத்திலே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜ தான். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல கம்பெனிகள் பல நூறு கோடிகளை தானமாக பாஜவுக்கு கொடுத்துள்ளார்கள்.

யாரெல்லாம் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள் அதிமுகவினர். கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை. நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல் திட்டம்: பாஜவை நார் நாராக கிழித்த அமைச்சர் பிடிஆர் appeared first on Dinakaran.

Tags : Minister ,BJP ,BDR ,Palanivel Thiagarajan ,Madurai Constituency Marxist Communist Party ,S. Venkatesan ,India ,Bangladesh ,Minister PDR ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள பாஜக தலைமை...