- ராதிகா
- உதயகுமார்
- திருமங்கலம் கரிசல்பட்டி
- Kallikkudi
- அமைச்சர்
- ஜனநாயகக் கட்சி
- விஜய பிரபாகரன்
- விருதுநகர்
- ராதிகா
- பாஜக
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று திருமங்கலம் கரிசல்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளில் பேசும்போது, ‘‘இந்த தொகுதியில் புதிதாக பாஜ சார்பில் ராதிகா போட்டியிடுகிறார். அவர்கள் எப்போது கட்சி ஆரம்பித்தார்கள். எப்போது கட்சியை நடத்தினார்கள். எப்போது பாஜ கட்சியில் சேர்ந்தார்கள் என்பது தெரியாது.
திடீர் சாம்பார், திடீர் கேசரி, திடீர் சமையல் போல் இந்த தொகுதிக்கு ராதிகா திடீரென வந்துள்ளார்.
அவர்கள் வந்தால் நன்றாக வரவேற்பு கொடுங்கள். வந்தாரை வாழவைப்பது திருமங்கலம் தொகுதி என்பதில் ஐயமில்லை. அவர்கள் எல்லாம் தேர்தலுக்கு வந்த விருந்தாளிகள். தேர்தலுக்கு பின் காணாமல் போயிவிடுவார்கள். ராதிகா சித்தி அல்லது பெரியம்மாவில் நடிக்க சென்று விடுவாரா என்பது நமக்கும் தெரியாது. அவருக்கும் தெரியாது. எனவே மண்ணின் மைந்தரான விஜயபிரபாகரனை ஆதரியுங்கள். விஜயகாந்தின் குலதெய்வம் கோயில் திருமங்கலத்தில் தான் உள்ளது.
அதனால் விஜயபிரபாகரன் எங்கும் செல்லமாட்டார். இதற்கு நாங்கள் கியாரண்டி தருகிறோம். அதிமுகவின் கியாரண்டி. இந்தமுறை இரட்டை இலை சின்னத்திற்கு பல்வேறு இடைஞ்சல்கள் வந்தன. இரட்டை இலை சின்னம் என்ன செய்தது. எம்ஜிஆர் கண்ட சின்னம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்த்த சின்னம், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்த சின்னம். இந்த சின்னத்தினை முடக்கவேண்டும் என போராடினார்கள். துரோகம் வென்றதாக சரித்திரம் கிடையாது’’ என பேசினார்.
The post திடீர் சாம்பார், திடீர் கேசரி போல் தேர்தலுக்கு திடீர் விருந்தாளி ராதிகா: பொளந்து கட்டிய உதயகுமார் appeared first on Dinakaran.