×
Saravana Stores

படங்களை போன்று மாநாடு நடத்தி இருக்காரு…சமக கட்சி கொடி கலர்தான் நடிகர் விஜய் கட்சி கொடியும்…பாஜவில் இருந்து மாட்சிங் பண்ணும் ராதிகா

கோவை: கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, வடகோவை குஜராத் சமாஜில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கொங்குநாடு கலைக் கல்லூரி செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கினர். அப்போது நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. வித்தியாசமாக உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சிக் கொடியின் வர்ணத்தை போன்றே, விஜயும் அதே வண்ணத்தை பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம். மங்களகரமான நிறம். அவர் பயன்படுத்தியிருக்கிறார். விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் ‘ஒன் மேன் ஷோ’வாக காட்டியிருக்கிறார். அவர் யோசித்து பேசுவார். பாஜவை தாக்கி பேச யோசிப்பார் என நான் நினைக்கிறேன். அதிமுகவை பற்றி ஏன் அவர் பேசவில்லை என்பது எனக்கு தெரியாது. அவரது அரசியல் கண்ணோட்டமும், பார்வையும் வேறு. அவரது அரசியல் வேற விதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post படங்களை போன்று மாநாடு நடத்தி இருக்காரு…சமக கட்சி கொடி கலர்தான் நடிகர் விஜய் கட்சி கொடியும்…பாஜவில் இருந்து மாட்சிங் பண்ணும் ராதிகா appeared first on Dinakaran.

Tags : Vijay ,Samaka Party ,Radhika ,BJP ,Coimbatore ,Coimbatore People's Service Centre ,Diwali ,Gujarat Samaj, Vadagobi ,Coimbatore South Assembly ,Vanathi Srinivasan ,Radhika Sarathkumar ,Kongunadu ,Samaka ,Party ,Dinakaran ,
× RELATED அரசியலை கண்டு எனக்கு பயமில்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரை