×

ரூ.500, ரூ.1,000ஐ பார்த்தா 5 ஆண்டுகள் கோபம் மக்களுக்கு போயிடும்: அன்புமணி சர்ச்சை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கணேஷ்குமாரை ஆதரித்து ஆரணியில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: அதிமுக தேசிய கட்சியுடன் கூட்டணியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரும் இல்லை. அதனால், அதிமுகவிற்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீர்கள்.

அதிமுக அண்ணாவின் பெயரை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். அண்ணாவின் கொள்கையை மறந்து விட்டார்கள். நான் 35 வயதிலேயே டெல்லியில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தேன். உலகத் தலைவர்கள் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்குகூட பில்கேட்ஸ் உடன் பேசுவேன். என் வீட்டுக்கு ஒருமுறை பில்கேட்ஸ் வந்து இருக்காரு.

பில்கிளிண்டன், ஜார்ஜ்புஷ் இதுபோன்ற உலக தலைவர்கள் எல்லாம் எனக்கு தெரியும். மக்களுக்கு 5 ஆண்டுகள் கோபம் இருக்கும். ஆனால், ஒருநாள் மட்டும் கோபத்தை மறந்து விடுவார்கள். அதற்கு ரூ.500, ரூ.1,000 காந்தி காரணம். அதனால், அந்த காந்திகளை மறந்துவிட்டு, இந்த தொகுதி முழுவதும் மக்களை பார்க்கிறேன். அனைவருக்கும் கோபம் இருக்கு, ஆத்திரம் இருக்கு. அதனால் போராட்டம் செய்வீர்களா. போராட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரூ.500, ரூ.1,000ஐ பார்த்தா 5 ஆண்டுகள் கோபம் மக்களுக்கு போயிடும்: அன்புமணி சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Arani ,R. Ganesh Kumar ,National Democratic Alliance ,Arani Lok Sabha ,Tiruvannamalai district ,PMK ,AIADMK ,National Party ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி...