- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 2 வது சர்வதேச கிரிக்கட் மை
- கோவா
- அமைச்சர்
- உதயநிதி
- சென்னை
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- அமைச்சர் உதவிசெயலாளர்
- ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கோரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் அறிவித்தார். சேப்பாக்கம் மைதானத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள முதல்வருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
“தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்” என தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதல்வருக்கு நன்றி: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.