×

நிதி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: நிதி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வடசென்னை தொகுதி ராயபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. பேருந்தில் மகளிருக்கு விடியல் பயணத் திட்டத்தை கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நிதி உரிமையை பெறுவதற்கான தேர்தல் இது; தேர்தலுக்கு பின் வட சென்னையில் நிலவும் பட்டா பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும்.

பேருந்தில் விடியல் பயணத் திட்டம் மூலம் 465 கோடி முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப் பெண் கல்வித் திட்டம் மூலம் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்.

இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர். பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை ஜொரிகள் ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தலுக்காகத்தான் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார் பிரதமர் மோடி. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி வந்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

 

The post நிதி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP government ,Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Vadachennai Constituency ,Rayapuram ,Dimuka Youth ,Vatchenai Constituency ,Candidate ,Veerasamy ,EU BJP government ,
× RELATED தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது,...