×

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை 2,477 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Mikjam ,Government of Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்