- காங்கிரஸ்
- தேர்தல்
- இந்தியா கூட்டணி
- திருமாவளவன்
- அரியலூர்
- சிதம்பரம் தொகுதி
- Senturai
- காங்கிரஸ் கட்சி
- இந்தியா
அரியலூர்: சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் நேற்று செந்துறையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது. வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்யும் அறிக்கை. இந்த தேர்தல் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசுப் பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு புரட்சிகரமான திட்டம். இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம். நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நம்பிக்கையளிக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது. அக்னி பாத் திட்டம் ரத்து வாக்குறுதியை வரவேற்கிறேன். சிறுபான்மையினருக்கு கல்வி உதவித் தொகை மீண்டும் வழங்குவது நல்ல திட்டம். இத்திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
இந்தியா கூட்டணிக்கு இத்தேர்தல் அறிக்கை வலு சேர்க்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றார்..
The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.