×

ஐடி நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கையை விரைந்து தடுத்து நிறுத்துவேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கலைக்கூத்தாடி நகர், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் சோழிங்கநல்லூர் தொகுதியில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நமது நாட்டை சேர்ந்த விப்ரோ, இன்போசிஸ், டிசிஸ், மகேந்திரா, காக்னிசன்ட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவானது. இந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அந்த ஊழியர்களின் நலன் சார்ந்த நாஸ்காம் கூட்டமைப்பு சார்பில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இதுகுறித்து யாரும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. இதனால், ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திரா , மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், பகுதி செயலாளர் வி.குமார், லட்சுமி, கவுன்சிலர் கபாலீஸ்வரன், தனசேகர், வட்ட செயலாளர்கள் ராமசேகர், சிவப்பிரகாசம், பிராமிஸ் அம்பேத்கர், விஜயகுமார், ரஞ்சித்குமார், டெல்லி பாபு ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

The post ஐடி நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கையை விரைந்து தடுத்து நிறுத்துவேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி appeared first on Dinakaran.

Tags : South Chennai ,AIADMK ,Jayavardhan ,CHENNAI ,J. Jayavardhan ,South Chennai Parliamentary Constituency ,Chozhinganallur ,Kalaikkoothadi Nagar ,Jalladianpet ,Medavakkam ,Dinakaran ,
× RELATED காலாவதியான மருந்து விற்றதாக தென்...