பன்னா: மபியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் மனுவில் குறைகள் இருந்ததாக கூறி அவருடைய மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சிக்கு மபியில் ஒரு தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது. அதன்படி காஜூராஹோ மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி போட்டியிடுகிறது. நான்கு கட்டமாக தேர்தல் நடக்கும் மபியில் உள்ள காஜூராஹோ உள்பட 6 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது.
காஜூராஹோவில் சமாஜ்வாடி சார்பில் மீரா யாதவ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பாஜ சார்பில் விஷ்ணு தத் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார். இதில், சமாஜ்வாடி வேட்பாளரின் மனுவை பன்னா மாவட்ட கலெக்டர் நேற்று நிராகரித்துள்ளார். வேட்புமனுவின், பி படிவத்தில் ஒரு இடத்தில் கையொப்பம் இடாததாலும், 2023 சட்டமன்ற தேர்தல் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நகலை இணைக்காததாலும் சமாஜ்வாடி மனு நிராகரிக்கப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
The post மபி சமாஜ்வாடி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு appeared first on Dinakaran.