திருச்சி: கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத்தர கலைஞர் ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க கலைஞர் சம்மதம் தெரிவித்ததாக எந்த இடத்திலும் ஆதாரம் கிடையாது என்றார்.
இலங்கை உடனான ஒன்றிய அரசின் ரகசிய உறவால் தான் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும். கச்சத்தீவை மீட்பதற்கு ஏதோ ஒரு வகையில் உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக வேட்பாளர் துரை வைகோ தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று பாஜக கூறுவது மலிவான அரசியல் என்று விமர்சித்தார்.
The post கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுத்தர கலைஞர் ஒரு போதும் ஒப்புக்கொள்ளவில்லை: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம் appeared first on Dinakaran.