ஆலந்தூர், ஏப். 4: ஏழைகளின் சின்னம் மைக் என்று கூறியபடி பிரசாரம் செய்தபோது, ஏழைகள் எப்போது மைக்கை எடுத்துட்டு போனாங்க என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பெண்கள் கிண்டல் செய்தனர்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும தமிழ்ச்செல்வி நேற்று உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் ஜீப்பில் நின்றபடி மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபடி சென்றார். அப்போது ஜீப்பிற்கு முன்னால் 4 பைக்குகளிலும், பின்னால் 2 கார்களிலும் தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்றனர். வேட்பாளர் தமிழ்ச்செல்வி கும்பிட்டபடி பொதுமக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றபோது, அவர் அருகில் மைக்குடன் இருந்த பெண் ஒருவர் ஏழைகளின் சின்னம் மைக் சின்னம், பாமர மக்களின் சின்னம் மைக் சின்னம், விவசாயிகளின் சின்னம் மைக் சின்னம் என்று பேசியபடி சென்றார். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் ஏழைகளின் சின்னம் மைக்காம், விவசாயிகளின் சின்னம் மைக்காம். எப்போது ஏழைகளும், விவசாயிகளும் மைக்கை எடுத்துட்டுப் போனாங்க. இவங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா என கிண்டலடித்தனர்.
The post ஏழைகளின் சின்னம் ‘மைக்’கா? நாதக வேட்பாளரை கலாய்த்த பெண்கள் appeared first on Dinakaran.