×

திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

ராசிபுரம், ஏப்.3: ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நாமக்கல் சின்ராஜ் எம்.பி., ஒன்றிய செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், சுற்றுச்சூழல் அணி விநாயகமூர்த்தி, யோகராஜன், விசிக, காங்கிரஸ், மதிமுக, கொங்குநாடு மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Rasipuram ,City Secretary ,Shankar ,Namakkal Sinraj ,Union Secretary ,Duraisamy ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு