×

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஏழை, எளியோருக்கு புதிய குடியிருப்புகள் வழங்கினேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி ரயில் நிலையம் அருகே நேற்று வீடு, வீடாக பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, மற்றும் என்.எஸ்.மோகன், கவுன்சிலர் கே.ஆர்.கதிர்முருகன், பழனி, தேமுதிக ஆனந்தன், எஸ்.டி.வி.ஐ.முகமது பிலால் அகமது, பகுதி செயலாளர் சேக் அலி, கிண்டி டி.கணபதி, எஸ்.என்.கன்னியப்பன், என்.ரவி, எம்.வசந்தகுமார், சீதாராமன், எஸ்.மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின்போது, வேட்பாளர் ஜெயவர்த்தன் கூறியதாவது: தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 2014-2019ல் இருந்தபோது குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் உருவாக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மத்திய நகர்ப்புற அமைச்சரை சந்தித்து தொடர் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பெருமளவு நிதி பெற்று, தென் சென்னை தொகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள பழைய குடிசைமாற்று வாரிய குடிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. பல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஏழை, எளியோருக்கு புதிய குடியிருப்புகள் வழங்கினேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : South Chennai ,AIADMK ,Jayavardhan ,Chennai ,Dr. ,J. Jayavardhan ,Guindy railway ,Saidapet ,South Chennai parliamentary ,Dinakaran ,
× RELATED காலாவதியான மருந்து விற்றதாக தென்...