பொன்னேரி: நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தும் வகையில் வாக்கார்கள் உறுதி மொழியை ஏற்று கொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களின் உறுதிமொழி ஏற்பு நேற்று பொன்னேரி நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சப் – கலெக்டர் வாஹே சன்கேத் பல்வந்த் தலைமை தாங்கினார். பொன்னேரி நகராட்சி மன்ற ஆணையர் கோபிநாத், பொன்னேரி தாசில்தார் மதிவாணன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமும் இன்றி மதம், இனம், ஜாதி சமூக தாக்கமும் இன்றி வாக்களிப்போம் என உறுதி அளிக்கிறோம் என உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, அங்குள்ள அனைவரும் விழிப்புணர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டனர். இதில் பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார், பொன்னேரி கோட்டாட்சியர், பொன்னேரி வட்டாட்சியர், பொன்னேரி நகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post பொன்னேரி நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி appeared first on Dinakaran.