திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலைக்கு திருநீர் பூசி சர்ச்சையை கிளப்பியவர். மேலும், வேட்பு மனு தாக்களின் போது, சட்டை அணியாமல் உள் பனியனோடு வந்து மனு தாக்கல் செய்தார்.
இவ்வாறாக தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வரும் முருகானந்தம் திருப்பூர் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பாரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரத்திற்கு முருகானந்தம் செல்லும் போது, அங்கு அங்கு கூட்டமே இல்லாத நிலையில் வாகனத்தில் நின்றவாரு கடமைக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க? என பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
The post ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்தும் பாஜக வேட்பாளர்: கூட்டம் இல்லாததால் கடமைக்கு பிரச்சாரம் appeared first on Dinakaran.