×

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம் : பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி :பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர்; அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன?. எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா?. வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடியும்?. நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது -மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும் ?,”என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

The post பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரம் : பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Supreme Court ,Baba Ramdev ,Delhi ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் உங்க...