×

ஒரு வாகனம், ஒரு பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு பாஸ்டேக் என்னும் மின்னணு முறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் ஒரே பாஸ்டேக்கை பயன்படுத்தி பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வாகனத்துக்கு பல பாஸ்டேக்குகள் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இது போன்ற முறைகேடுகளை தடுக்க ஒரு வாகனம், ஒரே பாஸ்டேக் நடைமுறையை கொண்டுவரப்படும் என சில மாதங்களுக்கு முன் ஒன்றிய அரசு அறிவித்து ஜனவரி 31ம் தேதி இதற்கான கடைசி நாள் என உத்தரவிட்டிருந்தது. பின்னர் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு வாகனம்,ஒரு பாஸ்டேக் நடைமுறை இன்று (நேற்று ) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்தார். ஒரு வாகனத்துக்கு பல பாஸ்டேக்குகள் உள்ளவர்கள் ஏப்.1 முதல் அதை பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

The post ஒரு வாகனம், ஒரு பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,EU GOVERNMENT ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...