- டிடீவி
- RB
- உதயகுமார்
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- ஆர்.பி. உதயகுமார்
- திராலி
- திருமங்கலம், மதுரை மாவட்டம்
- தின மலர்
- திருமங்கலம்
- TTV
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிடிவி.தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் என்னை தோற்கடிப்பதற்காக எல்லா வேலையையும் நாயாக அலைந்து பார்த்தார். ஆனால் அவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஒரு கட்சி தலைவருக்கு நாவடக்கம் வேண்டும். ஆனால் அவரிடம் நாவடக்கம் இல்லை. அதிகார மமதையில் இருந்து டிடிவி.தினகரன் இன்னும் இறங்கி வரவில்லை. அவர் மனிதனை மனிதனாக கூட மதிக்கத்தெரியாத ஒரு மனித இனத்தை சேர்ந்தவர். அவரைவிட திறமையாக என்னால் பேசமுடியும்.
அரசியல் நாகரீகம் கருதி அவர் நாவடக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவேண்டும். இல்லையெனில் இருக்கின்ற செல்வாக்கையும் அவர் இழந்து நிற்பார். பாஜவுடன் என்னை கூட்டணியில் வைக்கச் சொல்கிறீர்களே, நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கும் பாஜவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் எனக் கூறியவர் இதே டிடிவி.தினகரன் தான். அந்த டிடிவி எங்கே போனார்? வீரமுள்ள தன்மானமுள்ள அந்த டிடிவியைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தேடுகின்றனர். அவரை நம்பிச் சென்ற 18 எம்எல்ஏக்களை நடுத்தெருவில் நிறுத்தினார். இதற்கு காரணம் ஆணவம், அகம்பாவம், நாவடக்கம் இல்லாத தன்மை, மனிதநேயமற்ற தன்மை. இவ்வாறு கூறினார்.
* நம்பியார், பி.எஸ்.வீரப்பா போல கொடூரமான வில்லன் எடப்பாடி பழனிசாமி: பயப்படும் டிடிவி தினகரன்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நேற்று தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அதிமுக கூடாரம் காலியாகும். அந்த கட்சியும், கட்சியின் சின்னமும் இருக்காது. எடப்பாடி பழனிச்சாமி சினிமா நடிகர்கள் நம்பியார், பி.எஸ்.வீரப்பா போல கொடூர வில்லன். பதவிக்காக காலில் விழுந்து, பின்னர் பதவிக்கு வந்தவுடன் எங்களையே கட்சியைவிட்டு நீக்கிய நம்பிக்கை துரோகி தான் எடப்பாடி பழனிச்சாமி. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புனிதமான சின்னமாக விளங்கிய இரட்டை இலை தற்போது நம்பிக்கை துரோகிகளின் கையில் உள்ளது. எனவே இனிமேல் அந்த சின்னத்தை மறந்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
The post ‘இவிங்க பஞ்சாயத்துக்கு இல்லையா சார் எண்டு…’ என்னை தோற்கடிக்க நாயாக வேலை பார்த்தவர் டிடிவி: நாவடக்கத்தோடு பேசுங்க; ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.