×

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு உயிர் கொடுத்ததே பாமக தான்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா காலத்தில் அதிமுக-விற்கு உயிர் கொடுத்தது மட்டுமின்றி பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததும் பாமக தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஜெயலலிதா காலத்தில் அதிமுக-விற்கு உயிர் கொடுத்தது மட்டுமின்றி பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததும் பாமக தான். ஆனால் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பழனிசாமி துரோகம் செய்து விட்டார். அதிமுகவுக்கு உயிர் கொடுத்து, பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததுதான் நாங்கள் செய்த துரோகமா?. 2019-ல் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது; அதில் 5 தொகுதி பாமக வால் வெற்றி பெற்றீர்கள் என்று விமர்சத்துள்ளர்.

 

The post ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு உயிர் கொடுத்ததே பாமக தான்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : BAMA ,AIADMK ,Jayalalithaa ,Anbumani Ramadoss ,CHENNAI ,Pamaka ,Palaniswami ,Chief Minister ,Parliamentary Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி...