பாஜ கூட்டணியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிகளுடன் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர், ‘ஐயா 5 வருஷம் கழித்து எதுக்கு வந்தீங்க? கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு ஏரியை சீரமைத்து தருவேன் என வாக்குறுதி கூறிவிட்டு சென்றீர்கள். தற்போது ஐந்து வருடம் கழித்துதான் இங்கே வந்திருக்கிறீர்கள்? எதற்கு வந்தீர்கள்?,’ என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் டென்சனான வேட்பாளர் பாரிவேந்தர், சட்டென சுதாரித்து கொண்டு, ‘நான் வரும்போது நீ பாக்கல…. நீ வரும்போது நான் உன்ன பாக்கல… அவ்வளவு தான்,’ என கூறியபடி பொதுமக்களை பார்த்து தனக்கு வாக்கு அளிக்கும்படி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் சென்றிருந்த கட்சியினர் ஓடி சென்று கேள்வி கேட்ட அந்த நபரை சுற்றி வளைத்து சமாதானம் செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு உடனடியாக பிரசாரத்தை முடித்துக்கொண்ட வேட்பாளர் பாரிவேந்தர், கடும் அப்செட்டாகி பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.
The post 5 வருஷம் கழிச்சி எதுக்கு வந்தீங்க? மக்கள் கேள்வியால் ரிட்டர்ன் ஆன பாரிவேந்தர் appeared first on Dinakaran.