- கனிமொழி எம்.பி.
- திமுக
- கோயம்புத்தூர்
- பொள்ளாச்சி
- கோவை தெற்கு மாவட்டம்
- தலப்பாடி முருகேசன்
- பிரதி பொது செயலாளர்
- கோவை நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கூட்டணி
- கணபதி ராஜ்குமார்
- தின மலர்
பொள்ளாச்சி, மார்ச் 29: கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இன்று காலை 11 மணியளவில் சூலூர் கலங்கல் ரோடு சந்திப்பிலும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை ஆதரித்து மாலை 5 மணியளவிலும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நான்கு முனை சந்திப்பிலும், மாலை 6 மணிக்கு நெகமம் பகுதியிலும், உதய சூரியன் சின்னத்தில் வாக்குசேகரிக்க தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். எனவே, கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளின் அனைத்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கோவை, பொள்ளாச்சி திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்பி இன்று தேர்தல் பிரசாரம் appeared first on Dinakaran.