×
Saravana Stores

மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் கண்காணிப்பு குழு கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் 2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பொது தேர்தலில் மாற்றுத்திறன் படைத்தவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி வாக்களிக்க ஏதுவாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறன் வாக்காளர் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், வாக்குச்சாவடி மையம் தரை தளத்தில் அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

நுழைவாயில், வெளியேறுதல் மற்றும் வாக்களிக்கும் பெட்டி வரை தடையற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளில் கைப்பிடி போன்ற அனைத்து பாகங்களும் உரிய முறையில் பராமரிப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சாய்வு பாதையானது குறுக்குவெட்டு இல்லாமல் சீராக இருப்பதை கண்காணிக்கவும், மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களுக்கு உதவ பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் காவலர்கள் வாக்குச்சாவடி மையத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வலர்களுடன் விதிகளின்படி உதவியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்பதால் அதனை நடைமுறைப்படுத்த உறுதி செய்து அடையாள அட்டையுடன் வரும் மாற்றுத்திறனாளிகள் வெளியே தெரியாத மாற்றுத்திறன் குறைபாடுகளுடையவர்கள் உதவியாளருடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறன் வாக்களார்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்களிக்கும் பெட்டியில் தாங்களே தொட்டு உணர்ந்து வாக்களிக்க ஏதுவாக பிரெய்லிமொழி அடையாளத்தை பொறிக்கும்படி கேட்டுக்கொண்டதின்படி நடைமுறைபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

24 மணி நேரமும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கும் வாக்குச்சாவடி மையத்தினை அறிந்துக்கொள்வதற்கு இலவச தொலைபேசி எண்: 1800 4258515, காது கோளாதவர்கள் சைகை மொழி விளக்கத்துடன் கூடிய தொடர்பு எண் உருவாக்கி தர வேண்டும். சைகை மொழி மொழி பெயர்ப்பளார் தொலைபேசி எண் 9626217078 வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் மற்றும் வாக்கு எண்ணும் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்வதற்கு தேவையான வசதியை செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு காலை முதல் வாக்கு பதிவு முடியும் வரையில் தன்னார்வலர்கள் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும். மேலும் 10க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்தில் 2 தன்னார்வலர்கள் இருக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் தெரிவித்தார். இதில் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் கண்காணிப்பு குழு கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Election Monitoring Committee ,Persons with Disabilities ,District Revenue ,Officer ,Tiruvallur ,District Election Monitoring Committee ,District Revenue Officer ,A. Rajkumar ,District Disabled Welfare Officer ,Srinivasan ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...