×

உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி மாணவி படுகாயம்

வடலூர், மார்ச் 28: குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் நமிதா(17). இவர் கட்டியங்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வு முடிந்து அதே பகுதியில் உள்ள முருகன் என்பவரது நிலத்தில் அவரது பெற்றோருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உளுந்து அடிக்கும் இயந்திரத்தில், உளுந்து பயிரை கொட்டிய போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் நமிதாவின் துப்பட்டா சிக்கியது.

இதில் இயந்திரத்திற்குள் நமிதா சிக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காது துண்டானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி மாணவி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Murthy ,Periya ,Thoppukollai ,Kurinchipadi ,Namita ,Government Higher Secondary School ,Kattiankuppam, Murugan ,
× RELATED கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி புனரமைப்பு பணியில் முறைகேடு